2024- 2025 ஆண்டிற்கான முக்கிய நிகழ்வுகள்

26-01-2024 தை மாதம் 12ம் தேதி வெள்ளிக்கிழமை விளக்கு பூஜை நடைபெற்றது. கோயிலின் வடக்குப் பிரகாரத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சுமார் 40 பெண்மணிகள் பங்கேற்று விளக்கு பூஜை செய்தனர். அவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.

03-02-2024 மற்றும் 04-02-2024 ஸ்ரீராதா கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீகான்பூர் மகாதேவபாகவதர் தலைமையில் சுமார் 35 பாகவதர்கள் பங்கேற்றனர். ஞாயிறன்று அன்னதானத்தில் சுமார் 520 பக்தர்கள் பங்கு கொண்டனர்.

08-03-2024 மாசி மாதம் 25ம் தேதி மகாசிவராத்ரி உற்சவம் வழக்கம்போல் 4-கால பூஜையுடன் நடைபெற்றது. இரவு முழுவதும் பக்தர்கள் வந்தவண்ணமே இருந்தனர்.

24-02-2024 மாசி மகம் : மாசி மாதம் 12-ம் தேதி தேவார திருப்புகழ் சபையின் 30-ம் ஆண்டு விழா நடைபெற்றது. அன்று காலை சிவன் மற்றும் அடியார் மூர்த்தங்கட்கு அபிஷேகத்துடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. மாலை 6.15 மணிக்கு திருமுறை பண்ணிசை வழங்கியவர் : மோ.தமிழரசு ஓதுவார், வயலின் P.கணேசன், மிருதங்கம் N.கார்த்திகேயன்.
விழாவின் அங்கமாக 25-02-2024 மற்றும் 26-02-2024 தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை: திருக்கயிலாய ஸ்ரீ கந்த பரம்பரை சூரியனார் கோவில் ஆதீன ஸ்ரீகார்யம் தவத்திரு ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகளின் ( திருஞானசம்பந்தர் திருமடம், கோபி, ஈரோடு ) சிவநாம சங்கீர்த்தனம்- திருமுறை அருளாசியுரை- நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

ப்ரஹ்மோற்சவம் 2024
15-03-2024 முதல் 25-03-2024 வரை ஒன்பதாம் வார்ஷிக ப்ரஹ்மோற்சவம் இறையருளாலே விமரிசையாக நடந்தேறியது. தொடர்ந்து விடையாற்றி உற்சவத்தில் கீழ்க்கண்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்ற :

26-03-2024 : திரு சிக்கில் குருசரண் - இசை கச்சேரி.

27-03-2024 : திரு இரா .விஜயகுமார் அவர்களின் " எல்லாம் சிவமயம் " என்ற தலைப்பில் சொற்பொழிவு.

28-03-2024 : ஹரிணி ஜீவிதா அவர்களின் பரதநாட்டியம்.

குரு பெயர்ச்சி : 01-05-2024 புதன் கிழமை குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆனார். இதனையொட்டி விசேஷ பூஜை நடைபெற்றது. காலை 10 மணி முதல் 11 மணி வரை உபயதாரர் சங்கல்பம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 11.55 மணிக்கு விக்நேச்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து கடஸ்தாபனம், நவக்ரஹ சாந்தி ஹோமம், நவக்ரஹங்களுக்கும் விசேஷ அபிஷேகம், அலங்காரம், குரு பகவானுக்கு அர்ச்சனை, மஹாதீபாராதனையுடன் 3.45 மணிக்கு வழிபாடு நிறைவுற்றது. பக்தர்களுக்கு ப்ரசாதம் வினியோகிக்கப் பட்டது.

ஸ்ரீ சங்கர ஜயந்தி உற்சவம் : 12-05-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு விக்நேச்வர பூஜையுடன் கடஸ்தாபனம் செய்யப்பட்டது. பின்னர் ஸ்ரீதக்ஷிணாமூர்த்திக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ஆதி சங்கரருக்கு பூஜையும் , மஹாந்யாஸ பூர்வக ஏகாதச ருத்ர ஜப பாராயணம், அபிஷேகம், அர்ச்சனை, மஹாதீபாராதனையுடன் பிற்பகல் சுமார் 12.30 மணிக்கு வழிபாடு நிறைவுற்றது. ருத்ர ஜபத்தில் பங்கேற்ற பண்டிதரர்களுக்கு உணவளிக்கப்பட்டது. மாலை 6.30 மணிக்கு பூஜை செய்த ஆதிசங்கரர் படம் கோவில் வளாகத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நாம சங்கீர்த்தனத்துடன் நிறைவுற்றது.